சர்க்கரை ஆலையில் அரைவை தொடங்க வலியுறுத்தி - அலங்காநல்லூரில் விவசாயிகள் போராட்டம் :

By செய்திப்பிரிவு

அலங்காநல்லூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரைவை தொடங்க வலியுறுத்தி விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அலங்காநல்லூர் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பதிவு முறையாக நடக்காததால் 2018-ம் ஆண்டு முதல் அரைவை நடைபெறவில்லை. தற்போது 2 ஆயிரம் ஏக்கர் கரும்பு அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.

சிவகங்கை தனியார் ஆலை யும் மூடப்பட்டுள்ளது. இந்த ஆலைக்காக 1.50 லட்சம் டன் கரும்பு அறுவடைக்குத் தயாராக உள்ளது. இந்த கரும்பும் தற் போதைய சூழலில் அலங்கா நல்லூர் கொண்டு வரவே வாய்ப்பு உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டு களுக்கும் மேலாக அரைவை செய்ய கரும்பு இல்லாததால் நிறுத்தப்பட்ட அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையில் 2022-ம் ஆண்டுக்கான அரைவை உடனே தொடங்க வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை வளாகம் முன் காத்திருக்கும் போராட்டத்தை நேற்று காலை தொடங்கினர்.

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பழனிச்சாமி தலைமையில் விவசாய சங்கப் பிரதிநிதிகள் ராஜேந்திரன், கதி ரேசன், இளங்கோவன் உட்பட பலர் பங்கேற்றனர்.

நிர்வாகிகள் கூறுகையில், அரைவை தொடங்காததால் ஆலை உப மின் நிலையம் செயல்படாமல் உள்ளது.

இதனால் அரசுக்கு ரூ.110 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் விவசாயிகளிடம் பிடித்தம் செய்த ரூ.10 கோடியும் வீணடிக்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் இந்த ஆண்டு ஆலை இயக்கப்படும் என்று உத்தரவாதம் தரும் வரை போராட்டத்தைக் கை விடமாட்டோம் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்