பரமக்குடியில் குடும்ப வறுமையால் - தந்தை, மகன் தற்கொலை :

By செய்திப்பிரிவு

பரமக்குடியில் குடும்ப வறு மையால் தந்தை, மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக் குடி முசாபர்கனி பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (67). இவருக்கு கடந்த முப்பது வருடங்களுக்கு முன்பாக பவானி என்பவருடன் திருமணமாகி வெங்கடேஷ், நிவாஸ் என்ற இரு மகன்களும், ஒரு மகளும் உள்ள நிலையில் பவானி இறந்து விட்டார். இரண்டாவதாக கல்பனா என்ற ஆசிரியையை திருமணம் செய்தார்.

இந்நிலையில் இரண்டாவது மனைவி கல்பனாவும் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு நோய் வாய்ப்பட்டு இறந்து விட்டார். மூத்த மகன் வெங்கடேஷூக்கு யுவ என்பவரை திருமணம் செய்து, ஆறு மாத குழந்தை உள்ளது. இரண்டாவது மகன் நிவாஸ் (27) மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்தார். வெங்கடேஷுக்கு மூளையில் கட்டி வந்து ஆபரேஷன் செய்வதற்காக திருவனந்தபுரத்தில் உள்ள மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரது சிகிச்சைக்கு ரூ.18 லட்சம் தேவைப்படுவதால், வறுமையில் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார் லோகநாதன்.

இந்நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு மேல் ஆனதும் வீட்டை விட்டு தந்தை, மகன் வெளியே வராததை அறிந்த அக்கம் பக் கத்தினர் வீட்டை உடைத்து பார்த்துள்ளனர்.

அப்போது வீட்டில் லோகநாதன் மற்றும் அவரது மகன் நிவாஸ் ஆகிய இருவரும் பூச்சி மருந்தை குடித்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த பரமக்குடி நகர் போலீஸார் இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு உடற்கூராய்வுக்கு பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்