அமைச்சர் தலைமையில் 17-ல் நடக்க இருந்த சிறப்பு மக்கள் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு :

By செய்திப்பிரிவு

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் தலைமையில், 17-ம் தேதி நடக்க இருந்த சிறப்பு குறைதீர் முகாம் நிர்வாகக் காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தருமபுரி மாவட்டத்தில், வரும் 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 15, 16 ஆகிய தேதிகளில், முன்னர் குறிப்பிட்டதுபோலவே அனைத்து வட்டங்களிலும் சிறப்பு மக்கள் குறைதீர் முகாம்கள் நடைபெறும்.

ஆனால், 17-ம் தேதி காலை பென்னாகரம் வட்டம் ஏரியூர் ராமசாமி கவுண்டர்-பொன்னம்மாள் திருமண மண்டபத்திலும், நண்பகல் பென்னாகரம் வட்டம் முத்துகவுண்டர் திருமண மண்டபத்திலும், மாலை பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட சிறப்பு மக்கள் குறைதீர் முகாம்கள் மட்டும் நிர்வாகக் காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த முகாம்கள் நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும். முந்தைய 2 நாட்களில் நடைபெறும் சிறப்பு மக்கள் குறைதீர் கூட்டங்களின்போது அந்தந்த பகுதி மக்கள் கோரிக்கை மனுக்கள் அளித்து பயன்பெறலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்