அரியலூர் வட்டாட்சியர் அலுவ லகம் முன்பு நேற்று மறியலில் ஈடுபட்ட அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப் போர் உரிமைகளுக்கான சங்கத் தினர் 40 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.3,000 மற்றும் கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி களுக்கு ரூ.5,000 உதவித் தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி அச்சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் பாஸ்கரன் தலைமையிலான நிர்வாகிகள் அரியலூர் அண்ணா சிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அங்கி ருந்து ஊர்வலமாகச் சென்று வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து 40 பேரை போலீ ஸார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
இதே கோரிக்கையை வலியு றுத்தி தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு மாநில பொதுச்செயலாளர் எஸ்.நம்பு ராஜன் தலைமை வகித்தார். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாநகரச் செயலாளர் சி.ராஜன், மாநகரத் தலைவர் கே.மோகன் உட்பட 50 பேரை போலீஸார் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago