கரூர்: கரூர் ஜவஹர் பஜார், வெங்க மேடு, கருப்பவுண்டன் புதூர், காந்திகிராமம், தாந்தோணிமலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று திடீரென குண்டு வெடித்ததுபோல ஒரு சப்தம் கேட்டது. அப்போது லேசான அதிர்வும் உணரப்பட்டதாக சிலர் தெரிவித்தனர். இதனால் ஜவஹர் பஜாரில் உள்ள கடை களில் இருந்தவர்கள் அச்சம் காரணமாக கடைகளை விட்டு வெளியேறி வீதிக்கு வந்தனர். எதனால் இந்த சப்தம் வந்ததென தெரியவில்லை. இதுகுறித்து விசாரிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இதேபோல சப்தம் வந்தபோதும் ஜெட் ரக பயிற்சி விமானங்கள் மேகக் கூட்டத்துக்குள் நுழையும்போது ஏற்பட்ட சப்தம் எனக்கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago