ரங்கம் ரங்கநாதர் கோயி லில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் நேற்று ஒரே நாளில் ஏறத்தாழ 1.50 லட்சம் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
கோயிலுக்கு தரிசனத்துக்கு வரும் பக்தர்களை நெறிப்படுத்தும் வகையில் ரங்கா ரங்கா கோபுரம் வழியாக மட்டுமே பக்தர்கள் இலவச மற்றும் கட்டண தரிசனங் களில் அனுமதிக்கப்பட்டு வருகின் றனர். இந்த பக்தர்கள் மூலவர் மற்றும் உற்சவரை சேவித்து விட்டு, வெள்ளைக் கோபுரம் மற்றும் வடக்கு வாசல் கோபுரம் வழியாக வெளியேற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், நேற்று சொர்க் கவாசல் தினத்தன்று வெள்ளைக் கோபுரம் வழியாக தங்களை அனு மதிக்க வேண்டும் என உள்ளூர் பக்தர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரிடம் அவ்வப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்துவிடம் கேட்டபோது, ‘‘இன்று (டிச.15) பிற்பகலுக்குப் பிறகு பக்தர்களை கூட்டத்தை பொறுத்து வெள்ளைக் கோபுரம் வழியாகவும் பக்தர்களை அனுமதிக்கலாம் என முடிவு செய்யப் பட்டுள்ளது. நேற்று மட்டும் 1.50 லட்சம் பக்தர்கள் கோயிலில் தரிசனம் செய்துள்ளனர் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago