‘கரோனா பரவல் குறைந்ததால் கோயில் விழாக்களுக்கு அனுமதி’ :

By செய்திப்பிரிவு

திருச்சி: ரங்கம் ரங்கநாதர் கோயிலில் நேற்று நடைபெற்ற சொர்க்க வாசல் திறப்பு விழாவில் இந்து சமய அறநிலையத் துறை அமைச் சர் பி.கே.சேகர் பாபு பங்கேற்றார். பின்னர், அவர் செய்தியாளர்களி டம் கூறியதாவது:

கரோனா பரவல் காரணமாக கடந்த காலங்களில் கோயில்களில் விழாக்கள் தடைபட்டிருந்தன. தற்போது கரோனா பரவல் குறைந்து வருவதாலும், கடந்த 7 மாதங்களில் அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப் பட்டதாலும், இதுபோன்ற விழாக்களுக்கு தமிழக முதல்வர் அனுமதியளித்துள்ளார். தமிழக முதல்வரின் இந்த அறிவிப் புக்கு பக்தர்களும், அர்ச்சகர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்