திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் எஸ்.வி. கிருஷ்ணன் தலைமையில், செயலாளர் பெரும்படையார், தாலுகா செயலாளர்கள் முருகன், தர்மலிங்கம், கலைமுருகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் காசிவிஸ்வ நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்:
தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புக்கு தமிழக அரசு கோரியுள்ள ரூ.4,025 கோடி மற்றும் தற்போதைய பாதிப்புக்கான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்.
நெல் சாகுபடி முழுமையாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வீதம் வழங்க வேண்டும். மழை வெள்ள பாதிப்பு மற்றும் கோமாரி நோயால் இறந்த கால்நடைகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். தமிழகத்தில் நிலவும் உரத்தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுப்பதுடன், சாகுபடிக்கு தேவையான ரசாயன உரங்களை வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago