திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மறியலில் ஈடுபட்ட 53 மாற்றுத் திறனாளிகள் கைது செய்யப்பட்டனர்.
மாற்றுத் திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித் தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். கடுமையாக ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
சங்க மாவட்ட துணைத் தலைவர் தியாகராஜன் தலைமை வகித்தார். செயலாளர் குமாரசாமி முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் சங்கரசுப்பு, மெய்யசாமி, நடராஜன், லெட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட 53 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவில்பட்டி
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கோவில்பட்டியில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர் எஸ்.எம்.சர்க்கரையப்பன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் எம்.சாலமன் ராஜ் தொடங்கி வைத்தார். போராட்டத்தில் ஈடுபட்ட 20 பெண்கள் உள்ளிட்ட 52 பேரை போலீஸார் கைது செய்தனர். போராட்டத்தில் ஈடுபடாமல் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவியாக வந்து, சாலையோரமாக நின்றவர்களையும் போலீஸார் கைது செய்ய முயன்றனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago