பேரணாம்பட்டு: வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த மசிகம் கிராமத்தில் காவல் ஆய்வாளர் ராஜன்பாபு மற்றும் காவலர்கள் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரே இருசக்கர வாகனத்தில் சந்தேகத்துக்கிடமாக வந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியைச் சேர்ந்த சுஹேல் (26). பேரணாம்பட்டு ஓங்குப்பம் பகுதியைச் சேர்ந்த மணி (22), பேரணாம்பட்டு சேரன் வீதியைச் சேர்ந்த இர்பான் அஹ்மது (22) ஆகியோர் என தெரியவந்தது.
இவர்கள் 3 பேரும் சேர்ந்து கடந்த சில மாதங்களில் பேரணாம்பட்டு நகரில் உள்ள பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு நகை, பணத்தையும் திருடிச் சென்றது தெரியவந்தது. இதில், சுஹேல் மீது ஆம்பூர், வாணியம்பாடி, ஆலங்காயம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 14-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்களிடம் இருந்து 10 பவுன் தங்க நகைகள், எல்இடி டிவி, ஆந்திரா பதிவெண் கொண்ட இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago