வேலூர்: வேலூர் கோட்டை பூங்கா மைதானத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் என மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘மக்களவையின் பூஜ்ஜிய நேரத்தில் எழுப்பிய கேள்வியில், ‘வேலூர் நகரின் வரலாற்று சிறப்பு மிக்க கோட்டை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு பூங்கா மைதானத்தை இந்திய வரலாற்றின் மாபெரும் தலைவர்களான மகாத்மா காந்தி, பண்டிட் ஜவஹர்லால் நேரு, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோருடன் இந்நாள் தலைவர்கள் பலரும் பயன்படுத்தி உள்ளனர். இப்படி சிறப்பு மிக்க மைதானத்தை தற்போது பொதுமக்கள் பயன்படுத்த இந்திய தொல்லியல் துறை அனுமதி மறுக்கிறது. மைதானத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இந்திய தொல்லியல் துறையினர் அனுமதி வழங்க வேண்டும்’ என கோரிக்கை வைத்துள்ளதாக’’ தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago