திருப்பத்தூரில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் :

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் வரும் 17-ம் தேதி (நாளை மறுதினம்) காலை 10 மணிக்கு விவசாயிகள் குறை தீர்வுக்கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து அதற்கான தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதால் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்.

கரோனா தொற்று கட்டுப்பாடுகள் தீவிரமாக பின்பற்றப்படுவதால் கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி பங்கேற்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்