திருவண்ணாமலை: தி.மலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த காந்தப் பாளையத்தில் அகிலபாரத விஸ்வகர்ம ஜெகத்குரு மகா சன்னிதானம் நந்தல் மடாலயத்தின் 1,421-ம் ஆண்டு குரு பூஜை விழா நடைபெற்றது.
65 பீடாதிபதி சிவராஜ ஞானாச்சாரிய குருசாமிகள் தலைமை வகித்தார். அபிஷேக ஆராதனையுடன் குரு பூஜை தொடங்கியது. பணி நிறைவு பெற்ற மாவட்டக் கல்வி அலுவலர் தேவ.ஆசைத்தம்பி தலைமையில் விழா குழு தலைவர் கோ.விசுவநாதன், தருமபுரி மருத்துவர் முருகாச்சாரி ஆகியோர் முன்னிலையில் சமூக ஐவர்ண அனுமன் கொடியினை பௌரோகித ரத்னாகரம் ஜோதி முருகாச்சாரி ஏற்றி வைத்தார்.
பாபநாசம் சகோதரிகள் எஸ்.சிவஜெகதீஸ்வரி, எஸ்.சிவ.லட்சிதா மற்றும் குழுவினரின் திருமுறை இன்னிசை கச்சேரி நடைபெற்றது. 2022-ம் ஆண்டுக்கான நாட்காட்டி வெளியிடப்பட்டது. விஸ்வகர்மர்களின் வாழ்க்கை நிலை எங்கே சென்று கொண்டிருக்கிறது என்ற தலைப்பில் மருத்துவர் க.லட்சுமணன் உரையாற்றினார். சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு ஆதீன விருதுகள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை குருபூஜா விழாக்குழுவினரும், திருப்பணிக்குழுவினரும், ஆதீன பரிபாலன சபாவினரும் செய்திருந்தனர்.
பாரத தொலை தொடர்புத்துறை பொறியாளர் அருப்புக்கோட்டை ராஜேந்திரன், ஓய்வு பெற்ற உதவி ஆட்சியர்கள் கிரிஜாதேவி, ஆர் செந்தில்குமார், ஓமலூர் மணிவேல், செய்தித்தொடர்பாளர் முனைவர்.செ.நா.ஜனார்த்தனன் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், கண்ணமங்கலம் எ.கே.எஸ்.சரவணன் ஆச்சாரி நன்றி கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago