திருவண்ணாமலை மாவட்டத்தில் - கஞ்சா விற்றதாக 6 பேர் கைது :

திருவண்ணாமலை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், தலை மறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை கிராமிய காவல்துறையினர் கிரிவலப் பாதையில் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது, காவல்துறையினர் வருவதை அறிந்து 2 பேர் தப்பி ஓடினர். அவர்கள் விட்டு சென்ற பையை சோதனையிட்டதில் 400 கிராமம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இருவர் தப்பி ஓட்டம்

இதையடுத்து, தப்பி சென்றவர்கள் குறித்து நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் அடிஅண்ணாமலை கிராமத்தில் வசிக்கும் ஹரி(40), சமுத்திரம் கிராமத்தில் வசிக்கும் அர்ஜுனன்(40) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிவர்களை தேடி வருகின்றனர்.

செய்யாறு பகுதியில் ரோந்து

செய்யாறு, தூசி காவல் துறையினர் கண்காணிப்புப் பணியில் நேற்று முன்தினம் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த சின்ன ஏழாச்சேரி கிராமத்தில் வசிக்கும் பெருமாள்(21), தண்டலம் கிராமத்தில் வசிக்கும் வேலியப்பன்(20), கீழ்புதுப் பாக்கம் கிராமத்தில் வசிக்கும் விகல் (23), கொடநகரில் வசிக்கும் கோபி(22), கன்னியம்நகரில் வசிக்கும் மணி(28), வெங்கட் ராயன்பேட்டையில் வசிக்கும் ராஜா(30) ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 600 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்