பல்கலைக்கழக நிர்வாகத்தினர் கூறும் போது,‘‘பல்கலைக்கழகத்தின் தேர்வு நடைமுறைகளுக்கு உறுப்பு மற்றும் இணைப்புக் கல்லூரிகளின் முதல்வர்கள் பாராட்டு தெரிவித்தனர். வேளாண் கல்வியின் தரத்தை நிலைநிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர். தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு வரும் 22-ம் தேதி முதல் மறுதேர்வுகளை வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் நடத்துவதற்கும் முழு சம்மதம் தெரிவித்தனர். அனைத்து கல்லூரி முதல்வர்களும், ஒவ்வொரு மாணவர்களுக்கும் பாடக் குறிப்புகளை உடனடியாக அளிக்கவும், சிறப்பு வகுப்புகள் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டது. மாணவர்கள் மேற்படிப்புக்கு செல்ல ஏதுவாக, பல்கலைக்கழகத்தின் சார்பில் விடைத்தாள்கள் விரைவாக மதிப்பீடு செய்து, முடிவுகள் உடனடியாக அறிவிக்கப்படும். மாணவர்களின் கோரிக்கையை ஏற்று தேர்வுக் கட்டணம் ரூ.500-ல் இருந்து ரூ.200 ஆக குறைப்பதாகவும் உறுதி அளிக்கப்பட்டது’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago