புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு : சேலத்தில் வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சேலம் மெய்யனூர் பிரதான சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதுதொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:

சேலம் மெய்யனூர் இட்டேரி பகுதியில் ஏற்கெனவே ஒரு மதுபானக்கடை உள்ளது. அந்த கடையை வேறு இடத்துக்கு மாற்ற பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், தற்போது அப்பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் தொழில் நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ள நிலையில், மதுபான கடை திறந்தால் அனைத்து மக்களும் பாதிக்கப்படுவர். எனவே, இப்பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆர்ப்பாட்டத்தில், இட்டேரி பகுதி பொதுமக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்