நாமக்கல்: குமாரபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நகரச் செயலர் சக்திவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரங்கசாமி பங்கேற்று பேசினார்.
கூட்டத்தில், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், நூல் விலையை குறைத்து பல்லாயிரக்கணக்கான விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும். குமாரபாளையத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் பொது சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து தொழில்வளத்தை காக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயமணி, மாவட்ட குழு உறுப்பினர் ஆறுமுகம், சிஐடியு நகரச் செயலர் பாலுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago