ஈரோடு: ஒமைக்ரான் பரவலைத் தடுக்கும் வகையில்,
வெளிநாடுகளில் இருந்து ஈரோடு வந்த 99 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுகின்றனர்.
ஒமைக்ரான் பரவலைத் தடுக்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விமான நிலையங்களில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த சோதனையில் தொற்று இல்லை என தெரியவந்தாலும், அவர்களை ஒருவாரம் வரை தனிமைப்படுத்திக் கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதன்படி, பல்வேறு நாடுகளில் இருந்து ஈரோடு வந்த 99 பேர், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் தங்கியிருக்கும் வீடுகளுக்கு சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் சென்று கண்காணித்து வருகின்றனர். ஒரு வார இடைவெளிக்குப் பின்னர் அவர்களுக்கு மீண்டும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago