மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் - சென்னையில் 2022 பிப்.9 வரை குறைந்த வட்டியில் கடன் முகாம் :

By செய்திப்பிரிவு

கூட்டுறவுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மத்திய கூட்டுறவு வங்கி சார்பில், குறைந்த வட்டியில் நகைக்கடன் வழங்கப்பட்டு வருகிறது.

இதுதவிர மகளிர் சுய உதவிக்குழு, மகளிர் வளர்ச்சி, பணிபுரியும் மகளிர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர், உடல் ஊனமுற்றோர், சிறுதொழில் மேம்பாடு, கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான கடன் உள்ளிட்ட பல்வேறு வகையான கடன்கள் குறைந்த வட்டியில் வழங்கப்படுகின்றன.

வங்கியின் சிறப்பம்சங்கள், வாடிக்கையாளர்கள் சேவைகள் குறித்தான விழிப்புணர்வு கூட்டங்களை சென்னை மாவட்டம் முழுவதும் நடத்தவும், 71 கிளைகளை உள்ளடக்கி 10 சிறப்பு கடன் முகாம்களை நடத்தவும் திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக கடந்த டிச.8-ம் தேதி பாண்டிபஜார் கிளையில் சிறப்பு கடன் முகாம் நடைபெற்றது. இதில் 72 வாடிக்கையாளர்களுக்கு ரூ.34.51 லட்சம் கடன் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, டிச.15-ல் ஆதம்பாக்கம் கிளை, டிச.22- ஆர்.வி.நகர், டிச.29- அண்ணாநகர் 2-வது அவென்யூ, 2022 ஜன. 5 சூளைமேடு, ஜன.12 - எம்.எம்.டி.ஏ.காலனி, ஜன.19 - ஜாம்பஜார், ஜன.27- அசோக் நகர், பிப்.2- கொளத்தூர், பிப்.9- பிராட்வே தலைமை அலுவலகத்திலும் சிறப்பு கடன் முகாம் நடைபெறுகிறது.

எனவே சென்னை மாவட்டத்தில் வசிப்போர் பயன்பெறலாம். முகாம் தொடர்பான விவரங்களை அறிய 7550094090 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்