பண்ருட்டியில் திருமண விழாக்களில் பணம் பறிக்கும் திருநங்கைகள் :

பண்ருட்டியில் நடைபெறும் திருமண விழாக்களில் சென்று ஆசீர்வாதம் செய்வதாக கூறி திருநங்கைகள் பணம் பறித்து வருகின்றனர். அவர்களின் செயல் பொதுமக்களை முகம் சுளிக்க வைக்கிறது.

பண்ருட்டியில் திருநங்கைகள் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் கவலை அடைந்து வருகின்றனர். திருமணம் நடக்கும் இடங்களுக்குள் அழையா விருந்தினராக நுழைந்து, திருநங்கைகள் மணமக்களை ஆசீர்வாதம் செய்வதாக கூறி பணம் பறிப்பதில் குறியாக சுற்றி திரிந்து வருகின்றனர். இவர்கள் ரூ100, ரூ. 200 கொடுத்தால் வாங்குவதில்லை ரூ. 5 ஆயிரம் கேட்டு மிரட்டுகின்றனர். பணம் தர மறுப்பவர்களை அசிங்கமான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டுகின்றனர். இவர்களின் இந்த செயல் பார்ப்பவர்களை முகம் சுளிக்கும் அளவுக்கு வைக்கிறது. இவர்களின் சேட்டையால் கோயில் நிர்வாகிகள், பக்தர்கள், மணமக்கள் வீட்டார் ஆகியோர் கலங்கி உள்ளனர்.

நேற்று காலை திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் ஏராளமான திருமணங்கள் நடந்தன. அப்போது கோயிலுக்குள் நுழைந்த திருநங்கைகள், மணமக்களை ஆசிர்வாதம் செய்வதாக கூறி பணம் பறித்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர். ஆனால் திருநங்கைகள் முன்னரே அந்த இடத்தை விட்டு சென்று விட்டனர். போலீஸார் அவர்களின் விவரங்களை கேட்டுச் சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE