சென்னை- தமிழ் இணைய வழிக் கல்விக் கழக நிதியுதவியில், மதுரை டோக் பெரு மாட்டி கல்லூரி தமிழ் உயராய்வு மையத்தில் கணித்தமிழ் பேரவை தொடக்க விழா நடந்தது.
உதவி பேராசிரியர் சோபியா வர வேற்றார். தமிழ் உயராய்வு மையத் தலைவர் கவிதாராணி பேசினார். கல்லூரி முதல்வர் கிறிஸ்டியானா சிங் கணித்தமிழ் பேரவையின் செயல்பாடு, முன்னெடுப்பு பற்றி விளக்கினார்.
இதைத்தொடர்ந்து பேசிய கணித்தமிழ்ப் பேரவையின் முன்னாள் மாநில ஒருங் கிணைப்பாளர் தமிழ்ப்பிரிதி மாரி, கணினியில் தமிழின் உள்ளீடு மற்றும் அதன் பயன்பாடு குறித்த விளக்கமும், கணினியில் தமிழ் பயன்பாட்டை மேம்படுத்துவது குறித்தும் கணித் தமிழ் பேரவை தனது திட்டங்களாக கொண்டு செயல்படும்,’’ என்றார்.
தமிழ்நாடு அரசின் கணித்தமிழ் தொழில் நுட்ப நிபுணர் ராஜாராம் பேசும்போது, ‘‘எதிர்காலத்தில் இணையத்திலுள்ள தமிழ் வழி வாய்ப்புகள், கணினி எழுத்து முறை, விக்கி பீடியாவின் பயன்பாடு, இணையத்தில் படைப்புகள், கட்டுரைகள், ஆய்வேடுகள், அகராதிகள் இடம் பெற்று, கணினியில் தமிழ்மொழி மேம்பட வேண்டும். அதற்கு தமிழ் இணையக் கல்விக் கழகம் தொடர்ந்து செயலாற்றும், ’’ என்றார்.
உதவிப் பேராசிரியர் மணி மேகலை நன்றி கூறினார். தமிழ் இணையக்கல்வி கழகத்தின் அருண்குமார் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago