கரோனா ஊரடங்கு நேரத்தில் கோயில்கள் மூடப்பட்டன. மக் களும் வீடுகளைவிட்டு வெளியே வர முடியாததால் மதுரையில் மல்லிகைப் பூக்கள் விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் 50 சதவீத மல்லிகை தோட்டங்கள் அழிந்தன. மேலும் தொடர்மழை காரணமாகவும் பூக்கள் விளைச்சல் பாதிக்கப் பட்டுள்ளது.
இதையடுத்து சந்தைகளுக்கு மல்லிகைப் பூக்கள் வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது.
இதனால் சபரிமலை சீசன், முகூர்த்த நாட்களை முன் னிட்டு மல்லிகைப் பூ விலை அதிகரித்து வருகிறது. மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் நேற்று முன்தினம் மல்லிகைப் பூ கிலோ ரூ.4 ஆயிரத்துக்கு விற்றது. ஆனால் நேற்று ரூ.2 ஆயிரமாகக் குறைந்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago