15 அடி ஆழ கான்கிரீட் சுவரால் நிலத்தடி நீர் பாதிப்பு - வைகை ஆற்றங்கரையில் பூங்காக்கள் அமைக்க எதிர்ப்பு :

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

பராமரிப்பில்லாமல் உள்ள நகர் பூங்காக்களை சீரமைக்காமல், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் வைகை ஆற்றங்கரையை அழித்து கரையோரத்தில் 3 இடங்களில் பூங்காக்கள் அமைக்க கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

நீர்நிலைகளை ஆக்கிரமிக் கவோ, கட்டிடங்கள் கட்டவோ உச்ச நீதிமன்றம் தடை விதித்து மீறுவோர் மீது கடும் நடவடிக் கைகளை எடுக்கிறது. ஆனால், மதுரை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வைகை ஆற்றின் கரையில் மாநகராட்சியும், தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் 50 அடி அகலத்தில் நான்குவழிச் சாலை அமைக்கின்றன.

இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குலமங்கலம் சாலை சந்திப்பில் எல்ஐசி அருகே ஒரு பூங்கா, ஓபுளா படித்துறை அருகே மற்றொரு பூங்கா அமைக் கப்படுகின்றன. அதற்கான வரைபடம் தயாரிக்கும் பணி நடக்கிறது. அதேபோல் கோச் சடையில் மற்றொரு திட்டத்தில் பூங்கா அமைக்கும் பணி அரசு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.

இது குறித்து வைகை நதி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜன் கூறியதாவது: செல்லூர் எல்ஐசி பாலம் அருகே சங்கப்பூங்கா அமைப்பதாகக் கூறியுள்ளனர். ஒரு நதியின் வழித்தடம் மரங்கள், செடி, கொடிகளோடு இயற்கை சார்ந்தே இருக்க வேண்டும். மற்ற நாடுகளில் நதிகளுக்கென தனிச் சட்டமே இருக்கிறது.

வைகை ஆற்றில் தண்ணீர் ஓடும்போது முன்பு நிலத்தடி நீர்மட்டம் உயரும். தற்போது ஆற்றின் கரையில் மரக்கன்றுகளை நட முடியாதபடி கான்கிரீட் சுவர்களையும், தார்ச் சாலைகளையும் அமைத் துள்ளனர். 15 அடி ஆழ கான்கிரீட் சுவரால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே இருக்கிற பூங்காக்களைப் பராமரிக்காமல் புதிய பூங்காக்கள் அமைக்கின்றனர். இந்த பூங்காக் களையும் கட்டிய பிறகு பராமரிக்க மாட்டார்கள் என்றார். மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, பூங்காக்களால் ஆற்றின் கரைகள் பாதிக்கப்படாது என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்