ஈரோடு: ஈரோட்டில் இருந்து 46 புதூர் செல்லும் வழியில் சஞ்சய் நகர் உள்ளது. இங்கு குடியிருக்கும் கொற்றவேல் என்பவரது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராவில், நேற்று முன்தினம் இரவு மர்ம விலங்கின் நடமாட்டம் பதிவாகியுள்ளது. வீட்டின் அருகில் உள்ள காட்டுப்பகுதிக்குள், இரவு நேரத்தில் சிறுத்தை அல்லது கரடி போன்ற தோற்றம் கொண்ட விலங்கு செல்வது கேமரா பதிவில் தெரிகிறது.
இதுகுறித்து வனத்துறையிடம் கொற்றவேல் புகார் அளித்தார். வனத்துறை அலுவலர் சந்தோஷ், கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை நேற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து அப்பகுதியில் விலங்கின் கால் தடம், எச்சம் குறித்தும் அவர் ஆய்வு மேற்கொண்டார். இப்பகுதியில் வனவிலங்கு நடமாட்டம் உள்ளதா என்பதை அறிய வனத்துறையினர் இரு நாட்கள் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago