கஞ்சா கடத்திய 3 பேர் கைது :

By செய்திப்பிரிவு

பெரம்பலூர் டிஎஸ்பி சஞ்சீவ் குமார் தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் இரவு குன்னம் வட்டம் ஆதனூர் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஆதனூர் பேருந்து நிறுத்தத்தில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 3 இளைஞர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் வைத்திருந்த கைப்பைகளை சோதனையிட்டனர். அதில் ஒன்றரை கிலோ கஞ்சா இருந்தது.

இதையடுத்து 3 இளைஞர்களிடம் போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் அவர்கள் பெரம்பலூர் மாவட்டம் குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் சரத்குமார் (21), கோயம்புத்தூர் காரமடை பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் செபஸ்டி ராஜேந்திரன்(21), திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியைச் சேர்ந்த பரமசிவம் மகன் மாவேந்தன்(21) என்பது தெரியவந்தது.

இவர்களில் மாவேந்தன் ஐடிஐ படித்தவர். சரத்குமார், செபஸ்டி ராஜேந்திரன் ஆகியோர் கோயம்புத்தூரில் பி.இ இறுதியாண்டு படித்து வருகின்றனர். இவர்கள், கோயம்புத்தூரிலிருந்து சென்னைக்கு கஞ்சா கடத்திச் செல்லும் வழியில் ஆதனூரில் போலீஸாரிடம் பிடிபட்டனர்.

இவர்களை கைது செய்த மருவத்தூர் போலீஸார் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்