பெரம்பலூர் பெரம்பலூர் கோட்டத்துக் குட்பட்ட புதுக்குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று (டிச

By செய்திப்பிரிவு

பெரம்பலூர்

பெரம்பலூர் கோட்டத்துக் குட்பட்ட புதுக்குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று (டிச.14) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

இதனால், புதுக்குறிச்சி, காரை, சிறுகன்பூர், கொளக் காநத்தம், பாடாலூர், சாத்த னூர், எஸ்.குடிக்காடு, அயினா புரம், அணைப்பாடி, இரூர், தெற்குமாதவி, ஆலத்தூர் கேட், வரகுபாடி, தெரணி, தெரணி பாளையம், திருவளக்குறிச்சி, அ.குடிக்காடு, நல்லூர் ஆகிய கிராமங்களில் இன்று காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர்

கரூர் பாலம்பாள்புரம், ஒத்தக் கடை, குப்புச்சிபாளையம், மண்மங்கலம், வெள்ளியணை ஆகிய துணை மின் நிலை யங்களில் நாளை (டிச.15) மாதாந்திரப் பராமரிப்பு பணி கள் நடைபெற உள்ளன. இதனால், இத்துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதி களில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்