இரட்டைமலையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கக் கோரி ஆட்சியரிடம் மனு :

By செய்திப்பிரிவு

திருச்சி இரட்டைமலையில் ஜல்லிக் கட்டு நடத்த அனுமதி அளிக்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளிக்கப்பட்டது.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தலைமையில் நேற்று நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

இரட்டைமலை ஒண்டிக்கருப்பு சாமி கோயில் குழு சார்பில் அய்யாசாமி, ஒண்டிராஜ் உள்ளி ட்டோர் அளித்த மனுவில், “இரட்டைமலை ஒண்டிக்கருப்பு சாமி கோயில் அடிவாரத்தில் கடந்த 2008, 2009-ம் ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. அதன்பிறகு இதுவரை நடத்தப்படவில்லை. இந்தநிலை யில், ஒண்டிக்கருப்பு சாமி கோயி லுக்கு குடமுழுக்கு மற்றும் கோயில் அடிவாரத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வேண்டும்” என்று குறிப் பிடப்பட்டிருந்தது.

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் மாவட்டச் செயலாளர் வே.க.இலக்குவன் உள்ளிட்டோர் அளித்த மனுவில், “திருச்சி கம்பரசம்பேட்டை தடுப்பணை பூங்காவில் உள்ள கீழப்பழூர் சின்னச்சாமி சிலை பீடத்தில் அவரது வாழ்க்கை குறிப்பு கல் வெட்டு அமைப்பதுடன், பூங்காவை முறையாக பராமரிக்க வேண்டும். திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையோரம் உள்ள மொழிப்போர் தியாகிகள் கீழப்பழூர் சின்னச்சாமி, விராலிமலை சண்முகம் ஆகியோரது நினை விடங்களை முறையாக பராமரித்து இருவரது வாழ்க்கைக் குறிப்பு கல்வெட்டுகளை அமைக்க வேண்டும். கே.கே.நகர் முதன்மைச் சாலையில் உள்ள சின்னச்சாமி பூங்கா பெயர்ப் பலகையை மொழிப்போர் தியாகி கீழப்பழூர் சின்னச்சாமி நினைவுப் பூங்கா என்று மாற்றி அமைப்பதுடன், அங்கேயும் அவரது வாழ்க்கைக் குறிப்பு பதாகை அமைக்க வேண்டும். திருச்சி பாலக்கரை மேம்பாலத்தில் உள்ள மொழிப் போர் தியாகிகளின் கல்வெட்டுக்கு கம்பிவேலி அமைக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்