அரியலூர்: அரியலூரில் காவல் துறை சார்பில் போதைப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறு வாழ்வுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட எஸ்.பி கே.பெரோஸ்கான் அப்துல்லா தலைமை வகித்து பேசியது: போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் அந்தப் பழக்கத்தை விட்டு மீள வேண்டும். போதைப் பழக்கம் கொண்ட மனிதர்கள் தங்களது பகுத்தறிவை இழக்கின்றனர். போதைப் பழக்கம் உள்ளவர்களை மீட்க அரியலூர் மாவட்ட காவல்துறை உறுதுணையாக இருக்கும் என்றார்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கூடுதல் எஸ்.பி திருமேனி முன்னிலை வகித்தார். டிஎஸ்பி மதன் மற்றும் போதைப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago