செவிலியர் கொலை வழக்கில் - 2 இளைஞருக்கு ஆயுள் சிறை :

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணம் மவுனமடத்தைச் சேர்ந்த வர் துரைகண்ணு மகள் கலாவதி (55). செவிலியரான இவர் கணவ ரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார்.

2017-ல் திருச்சி மாவட்டம் கல்லக்குடி அருகேயுள்ள வடுகர்பேட்டை அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் பணிபுரிந்தபோது, சுகாதார நிலைய வளாகக் குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார்.

இதனிடையே, 2017 ஆக.26-ம் தேதி மகளைப் பார்க்க துரைக் கண்ணு வடுகர்பேட்டை சென்ற போது, வீட்டின் கழிப்பறையில் கைகள், கால்கள் சேலையால் கட்டப்பட்டு, வாயில் துணி திணிக் கப்பட்ட நிலையில் கலாவதி மயங்கிக் கிடந்தார்.

இதையடுத்து, திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கலாவதி சிகிச்சை பலனின்றி ஆக.29-ம் தேதி உயிரிழந்தார்.

முன்னதாக, கலாவதி அளித்த வாக்குமூலத்தில், வடுகர்பேட்டை அருகேயுள்ள செம்மன்பாளையத்தைச் சேர்ந்த சிமியோன்ராஜ் மகன் அகஸ்டின் லியோ(21), அய்யாத்துரை மகன் ராமன்(20) ஆகிய இருவரும் மாத்திரை கேட்டு தொல்லை கொடுத்ததாகவும், தரமறுத்ததால் வீட்டுக்குள் புகுந்து தன்னைத் தாக்கி கை, கால்களை கட்டி கழிப்பறைக்கு இழுத்துச் சென்று பிளீச்சிங் பவுடரை முகத்தில் தேய்த்ததாகவும் கூறி இருந்தார்.

இதுகுறித்து கல்லக்குடி போலீ ஸார் வழக்குப் பதிவு செய்து அகஸ்டின் லியோ, ராமன் ஆகி யோரை கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த திருச்சி மகளிர் நீதிமன்ற நீதிபதி வத்சன், குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ.8,000 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்