தென்காசி: தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் செல்வம்(45). இவர், சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலையில் அரிசிக் கடை நடத்தி வருகிறார். இவரது கடையின் பூட்டை உடைத்து, கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள், கடையில் இருந்த ரூ.1.50 லட்சம் பணத்தை திருடிக்கொண்டு சென்றுள்ளனர். இதுகுறித்து செல்வம் அளித்த புகாரின்பேரில், சங்கரன்கோவில் டவுன் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago