சதக்கத்துல்லா கல்லூரியில் நூலகம் திறப்பு :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி: பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் அதிநவீனமாக கட்டப்பட்டுள்ள ஹாஜி மு.ந.முஹம்மது சாகிப் நூலக திறப்பு விழா நாளை மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. நூலகத்தை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திறந்துவைத்து உரையாற்றுகிறார்.

இது தொடர்பாக கல்லூரி முதல்வர் மு.முஹம்மது சாதிக் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நூலக திறப்பு விழாவில் கல்லூரி தாளாளர் த.இ. செ.பத்ஹூர் ரப்பானி தொடக்க உரையாற்றுகிறார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் கா.பிச்சுமணி, பாளையங்கோட்டை சட்டப் பேரவை உறுப்பினர் மு.அப்துல் வஹாப் வாழ்த்துரை வழங்குகின்றனர். கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் எஸ்.செய்யது அப்துல் ரகுமான், பொருளாளர் ஹெச்.எம். ஷேக் அப்துல்காதர் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலை வகிக்கிறார்கள். கல்லூரி நிர்வாகத்தின் நிதியுதவியில் கட்டப்பட்டுள்ள அதிநவீன நூலக கட்டிடத்தை அமைச்சர் க.பொன்முடி திறந்து வைக்கிறார். கல்லூரி துணை முதல்வர் எஸ்.எம்.ஏ.செய்யது முகமது காஜா நன்றி கூறுகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்