திருநெல்வேலி: வள்ளியூர் வியாபாரிகள் சங்க தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ராஜ்குமார், முருகன் ஆகியோர் தலைமையில் ஓர் அணியும், பி.டி.பி. சின்னதுரை, அந்தோணி செல்லத்துரை ஆகியோர் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிட்டது.
தேர்தல் வாக்குப்பதிவு நேற்றுமுன்தினம் நடைபெற்றது. மொத்தம் உள்ள 349 வாக்குகளில் 339 வாக்குகள் பதிவானது. இதில் தலைவராக என். முருகன், செயலாளராக எஸ்.ராஜ்குமார் ஆகியோர் வெற்றிபெற்றனர்.
நிர்வாகக்குழு உறுப்பினர்களாக எஸ்.அருணா, வி.ராதாகிருஷ்ணன், பி.பசுமதி மணி, ஏ.சேதுராமலிங்கம், ஜோவின் பார்ச்சுனேட் , சி.சுரேஷ், எம்.காதர்மைதீன், எம்.ரவிசங்கர், சிவந்த கரங்கள் அமைப்பு தலைவர் சிதம்பரகுமார், வி.செலின், என்.சங்கரன், பேர்ல்சன் ஜூகின் ராஜா, எஸ்.கார்த்தீசன், இ.செல்வராஜ், எஸ்.கணேசன், வி.ஜீவா, கே.ராஜேந்திரன், கே.பாலமுருகன், ஆர்.கண்ணன் வெற்றி பெற்றனர். புதிய நிர்வாகிகள் வரும் 19-ம் தேதி பொறுப்பேற்கிறார்கள்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago