திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அணைப் பகுதியில் 20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பிற அணைப்பகுதிகள் மற்றும் இடங்களில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்):
பாபநாசம்- 16, சேர்வலாறு- 13, நம்பியாறு- 7, கொடுமுடியாறு- 12, அம்பாசமுத்திரம்- 4, சேரன்மகாதேவி- 15.6, ராதாபுரம்-12, நாங்குநேரி- 2, களக்காடு- 10.4, மூலைக்கரைப்பட்டி- 6, பாளையங்கோட்டை- 4, திருநெல்வேலியில் 5.6. மி.மீ மழை பெய்துள்ளது.
பாபநாசம் அணை நீர்மட்டம் 138.95 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,379 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 842 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் நேற்று காலை8 மணி வரை 24 மணி நேரத்தில் கடனாநதி அணையில் 6 மி.மீ., தென்காசியில் 1.40 மி.மீ., கருப்பாநதி அணை, ஆய்க்குடி, சிவகிரியில் தலா 1 மி.மீ. மழை பதிவானது. கடனாநதி அணை நீர்மட்டம் 83.20 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 80.75 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 70.86 அடியாகவும் இருந்தது.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago