சுந்தரனார் பல்கலை.யில் நாளை பட்டமளிப்பு விழா - 1,243 பேருக்கு ஆளுநர் பட்டம் வழங்குகிறார் : துணைவேந்தர் பிச்சுமணி தகவல்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த ஆண்டு கரோனா காரணமாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடத்தப்படவில்லை. எனவே, 2 ஆண்டுகளுக்கும் சேர்த்து அதாவது, 2019-2020, 2020-2021-ம் கல்வியாண்டுகளில் பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கு 28-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழகத்தில் 15-ம் தேதி (நாளை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

இதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி 14-ம் தேதி (இன்று)பிற்பகல் 2 மணிக்கு பல்கலைக்கழகத்துக்கு வருகிறார். பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைபேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் தனித்தனியாக கலந்துரையாடுகிறார். மேலும் முக்கியத் துறைகளையும், சூரிய மின்உற்பத்தி மையத்தையும் பார்வையிடுகிறார். பின்னர் பல்கலைக்கழகத்திலுள்ள விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். 15-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். இந்தவிழாவில் 1,243 பேருக்கு நேரிடையாக பட்டம் வழங்குகிறார். இதில்204 பேர் தங்கப்பதக்கம் பெறுகிறார்கள். பட்டமளிப்பு விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வாழ்த்துரை வழங்குகிறார். திருவனந்தபுரம் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணைவு கழகத்தின் இயக்குநர் அஜயகோஷ் பட்டமளிப்பு விழா உரையாற்றுகிறார் என்று தெரிவித்தார்.

பல்கலைக் கழக பதிவாளர் (பொறுப்பு) மருதகுட்டி, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுருளியாண்டி ஆகியோர் உடனி ருந்தனர்.

2019-2020, 2020-2021-ம்கல்வியாண்டுகளில் பட்டப் படிப்பை முடித்தவர்களுக்கு 28-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழகத்தில் 15-ம் தேதி (நாளை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்