விபத்தில் கன்னியாகுமரி இளைஞர் மரணம் :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி: கன்னியாகுமரி மாவட்டம் தாமரைகுளம் ஆர்.சி. சர்ச் தெரு அலெக்ஸ் மகன் மஸ்கிரியான் (24). இவரும், இவரது நண்பரான கன்னியாகுமரி மாவட்டம் செட்டிகுளத்தைச் சேர்ந்த பிரின்ஸ் (23) என்பவரும் காரில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் வந்து கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை முக்கூடல்- பொட்டல்புதூர் சாலையில் செங்குளம் விலக்கு அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் கார் மோதியது. இதில் காரில் இருந்த மஸ்கிரியானும், பிரின்ஸும் பலத்த காயமடைந்தனர். பாப்பாக்குடி போலீஸார் அங்கு சென்று காரில் சிக்கியிருந்த 2 பேரையும் மீட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், வழியிலேயே மஸ்கிரியான் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். முதலுதவி சிகிச்சைக்கு பின் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரின்ஸ் சேர்க்கப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்