திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெள்ளார் கிராமத்தில் வசிப்பவர் மாயக்கண்ணன். இவர், மனைவி சிவகாமியை(35) அழைத்து கொண்டு, வந்தவாசியில் நேற்று முன் தினம் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பினார்.
வந்தவாசி – திண்டிவனம் தென்வணக்கம்பாடி கிராமம் அருகே சென்றபோது, இரு சக்கர வாகனம் மீது அவ்வழியாக வந்த ஆட்டோ மோதியது.இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரும் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேல்சிகிச்சைக்காக புதுச்சேரிக்கு கொண்டு செல்லும் வழியில் சிவகாமி உயிரிழந்துள்ளார். இது குறித்து தெள்ளார் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago