ஆரணியில் மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரம் தாண்டவராயன் தெருவில் வசித்தவர் தினேஷ்பாபு(42). இவர், சேத்துப்பட்டு பகுதியில் இரு சக்கர வாகன உதிரி பாகங்கள் விற்பனை கடை நடத்தி வந்தார். நேற்று முன் தினம் இரவு வீட்டுக்கு புறப்பட்டார். ஆரணி காந்தி சாலை வழியாக நடந்து செல்லும்போது சாலையில் மயங்கி விழுந்துள்ளார். பின்னர் அவர் மீட்கப்பட்டு, ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்