பரங்கிப்பேட்டை போலீஸாரின் மனிதநேய செயலுக்கு பாராட்டு :

By செய்திப்பிரிவு

பரங்கிப்பேட்டை போலீஸாரின் மனித நேய செயலுக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

பரங்கிப்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பி. முட்லூர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 30 வயதுள்ள மனநலம் பாதித்த பெண் ஒருவர் அரைகுறை ஆடையுடன் அலைந்து கொண்டிருந்தார். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் பரங்கிப்பேட்டை போலீஸாருக்கு தகவல் தந்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீஸார் அந்த பெண்ணுக்கு புது ஆடை வாங்கிக்கொடுத்து அணிவித்து, கடலூரில் உள்ள பெண்கள் மனநல காப்பகத்தில் சேர்த்தனர்.

நேற்று முன்தினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீஸார் அகரம் ரயிலடி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மானம்படி பகுதியில் எதிர்எதிரே வந்த 2 பைக்குகள் மோதிக் கொண்டன. இதில் ஒரு பெண், இரண்டு ஆண்கள் ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதனை பார்த்த ரோந்து போலீஸார் உடனடியாக விபத்தில் காயமடைந்த 3 பேரையும் போலீஸ் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது போன்ற மனித நேய செயல்களில் ஈடுபட்டு வரும் பரங்கிப்பேட்டை போலீஸாருக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்