ரூ.1.38 கோடி இழப்பீடு : நெடுஞ்சாலை ஆணைய பொது மேலாளர் மீது சிபிஐ வழக்கு :

மதுரை-ராமேசுவரம் (என்எச்49), தஞ்சை-புதுக்கோட்டை (என்எச்229) தேசிய நெடுஞ்சாலை பிரிவுகளில் கடந்த 2014-17 காலகட்டத்தில் சாலை அமைக்கும் பணியின் போது, ஒப்பந்ததாரர்களுக்கு பணி ஒதுக்கீட்டில் 5 சதவீதம் தொகை கமிஷன் பெற்று ஒப்புதல் வழங்கியதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையத் துணை பொதுமேலாளர் முத்துடையார் என்பவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதன்படி ரூ.1 கோடியே 38 லட்சத்து 90 ஆயிரம் வருவாய் இழப்பீடு செய்ததாகவும் அவர் மீது புகார் கூறப்பட்டது.

இது குறித்து முத்துடையார் மீது சிபிஐ-யில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் துணை மேலாளர் கடந்த வாரம் புகார் அளித்தார்.

இதன்பேரில் முத்துடையார் மற்றும் தெலங் கானாவைச் சேர்ந்த கேஎன்ஆர் ஒப்பந்த நிறுவனம், சென்னையைச் சேர்ந்த ஒப்பந்த நிறுவன நிர்வாகி காயத்ரி உட்பட 4 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் மதுரை சிபிஐ ஆய்வாளர் அஜின்ராஜ் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE