சேலம் செவ்வாய்ப்பேட்டையில் சுங்கம் என்ற பெயரில் மிரட்டல் வசூல் : மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வர்த்தகர்கள் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சேலம் செவ்வாய்ப்பேட்டையில், சுங்கம் வசூல் என்ற பெயரில்மிரட்டல் வசூலில் ஈடுபடுபவர்களைத் தடுக்க, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வர்த்தக நலச்சங்கம் வலியுறுத்தி உள்ளது.

சேலம் செவ்வாய்ப்பேட்டை மளிகை மற்றும் ஷாப் வர்த்தக நலச் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. சங்கத் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். சேலம் நகர அனைத்து வணிகர்கள் சங்க பொதுச்செயலாளர் ஜெயசீலன், கோபாலகிருஷ்ணன், ரமேஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துவிட்டதால், பருப்பு வகைகள், எண்ணெய் போன்றஅத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துவிட்டதாக போலியான பிம்பம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அது உண்மையல்ல, ஜிஎஸ்டி வந்த பின்னர், அத்தியாவசியப்பொருட்களின் விலை சீராகவே உள்ளது.

சுங்கம் என்ற பெயரில், சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதிகளில், கடுமையான சொற்களைப் பயன்படுத்தியும், மிரட்டியும் வசூல் செய்யப்படுவதை, தடுக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். செவ்வாய்ப்பேட்டை பகுதியில் அனைத்து சாலைகளும் பாதாளசாக்கடை மற்றும் இதர பணிகளுக்காக தோண்டப்பட்டு, பல மாதங்களாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்