திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கி ணைந்த பேருந்து நிலையம் அமையவுள்ளதாக கூறப்படும் இடத்தில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் முட்புதர்களை அகற்றி, இடத்தை சமன்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
திருச்சி மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் களையும் வகையில் திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்று 1996-ம் ஆண்டு முதலே அனைத்துத் தரப்பு மக்களும் வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், திருச்சி யில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகம் தமிழ்நாடு நகர்ப்புற நிதி- உட்கட் டமைப்பு மேம்பாட்டுக் கழக நிதியுதவியுடன் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அறி வித்தார்.
இதையடுத்து, ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக் கும் பணி தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில், பேருந்து நிலையம் அமையவுள்ளதாக கூறப்படும் பஞ்சப்பூர் பகுதியில் செடிகள், முட் புதர்களை அகற்றும் பணியும், கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தில் உள்ள கைவிடப்பட்ட கழிவுநீர் சேகரிப்பு தொட்டிகளை இடித்து அந்த இடத்தை சமன்படுத்தும் பணியும் கடந்த 4 நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக, மாநகராட்சி அலுவலர்கள் கூறும்போது, “ஒருங் கிணைந்த பேருந்து நிலையம் அமையவுள்ள இடத்தை சுத்தப் படுத்தி, சமன்படுத்தும் பணி நடை பெற்று வருகிறது. அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது பேருந்து நிலையத்துக்கான இடத்தை எளிமையாக பார்வையிடும் நோக் கில் இந்தப் பணி மேற்கொள் ளப்படுகிறது. பேருந்து நிலை யத்துக்கு அடிக்கல் நாட்டுவது, பணிகள் தொடங்குவது குறித்து அரசு அறிவிக்கும்” என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago