பாதுகாப்பு மிக்க, வளர்ச்சி பெற்றதாக கரூர் மாவட்டத்தை உருவாக்க வேண்டும் : அமைச்சர் வி.செந்தில்பாலாஜி அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

கரூர் மாவட்டம் பாதுகாப்பு மிக்க, வளர்ச்சி பெற்ற மாவட்டம் என்ற நிலையை நாம் அனைவரும் சேர்ந்து உருவாக்க வேண்டும் என அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம் வெள்ளியணை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் இளம் தளிர் இல்லம் திட்ட தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த திட்டத்தை மாநில மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தொடங்கி வைத்து, மாணவி களுக்கு மரக்கன்றுகளையும், மாணவிகளின் பெற்றோர்களுக்கு குழந்தை திருமணம் எதிர்ப்பு தொடர்புடைய கடிதங்களையும் வழங்கி, குழந்தை திருமணம் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.

பின்னர், அவர் பேசியது: கடந்த காலங்களில் மாணவிகளுக்கு சில விரும்பத்தகாத செயல்கள் நடந்து விட்டன. இனி வருங்காலங்களில் அதுபோன்று நடக்காமல் இருப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ‘நிமிர்ந்து நில் துணிந்து சொல்' பெண்களின் பாதுகாப்பு இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதன் அடுத்த நிகழ்வாக இளம் தளிர் இல்லம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மாணவிகளிடம் விழிப்பு ணர்வை ஏற்படுத்துவது மட்டுமில் லாமல், அவர்களின் பெற்றோர்க ளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத் தும் நோக்கத்தில் இளம் துளிர் இல்லம் திட்டம் மூலம் அனைத்து மாணவிகளின் பெற்றோர்களிடமும் குழந்தை திருமணம் செய்து வைத்தல் கூடாது என்ற உறுதி மொழி கடிதம் வழங்கப்பட் டுள்ளது. வருங்காலங்களில் கரூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் என்பது இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

மேலும், மாணவிகளுக்கு கொடுக்கக்கூடிய மரக்கன்றுகளை அவர்களின் வீடுகளில் நட்டு, அதை செல்பி எடுத்து அனுப்பி வைக்கவேண்டும். அவ்வாறு செய்யும்போது, இந்த இயக்கத்தில் நமக்கும் பங்கு உண்டு என்ற நிலைப்பாடு உருவாகும்.

ஒவ்வொரு ஆசிரியைக்கும் 15, 20 மாணவர்கள் ஒதுக்கப்பட்டு, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற் படுத்தி வழிநடத்த கூடிய ‘அகல் விளக்கு' என்ற ஒரு திட்டமும் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இந்த 3 திட்டங்களையும் ஒருங்கி ணைத்து செயல்படுத்தி, கரூர் மாவட்டம் பாதுகாப்பு மிக்க, வளர்ச்சி பெற்ற மாவட்டம் என்ற நிலையை நாம் அனைவரும் சேர்ந்து உருவாக்க வேண்டும் என்றார்.

விழாவுக்கு, எம்எல்ஏக்கள் இரா.மாணிக்கம், க.சிவகாமசுந்தரி, ஆர்.இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதன்குமார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார், தாந்தோணி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சிவகாமி, வெள்ளியணை ஊராட்சித் தலை வர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்