பாஜக திருச்சி மாநகர் மாவட்ட செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ராஜசேகரன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன், மாநில பட்டியல் அணி தலைவர் பொன்.பாலகணபதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
இதில் கனமழை காரணமாக அரியாற்றில் உடைப்பு ஏற்பட்டு, வெள்ளம் ஊருக்குள் வருவதைத் தடுக்க அதன் கரைகளை பலப்படுத்த வேண்டும். திருச்சி மாநகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணமாக வழங்க வேண்டும்.
திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago