திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் பாரதியார் பிறந்தநாள் விழா நடைபெற்றது. அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி வரவேற்று பேசினார். பொதிகை தமிழ்ச் சங்க தலைவர் கவிஞர் பே.ராஜேந்திரன் தலைமை வகித்தார். அப்துல் வகாப் எம்எல்ஏ, முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு மாணவ, மாணவிகளுக்கு பரிசளித்து பேசும்போது, “ தமிழ்வழியில் படித்த மாணவர்களுக்கு மாநில தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் முன்னுரிமை அளித்து, இன்றைய மாணவர் களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார் முதல்வர். பொருநை அருங்காட்சியகத்தை திருநெல்வேலி மாவட்டத்துக்கு கொடுத்த முதல் வருக்கு நன்றி.
இந்தியாவிலேயே தலைசிறந்த நாகரிகம் நம் தாமிரபரணி நாகரிகம் என்று உலகுக்கு எடுத்துரைக்கும் விதமாக, சர்வதேச அருங்காட்சியகம் அமைய தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னெடுப்பில் ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாரதியாரின் லட்சியங்களை இளைய தலைமுறையினர் கடைபிடிக்க வேண்டும்” என்றார்.
பொதிகை தமிழ்ச் சங்கத்தின் வாசுகி சுரேஷ்நாத் எழுதிய ‘திறக்கப்படாத புத்தகம்’ என்ற கவிதை நூலை சட்டப்பேரவைத் தலைவர் வெளியிட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago