நாங்குநேரி அருகே உள்ள நம்பி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்(37). இவரது மனைவி முத்து, கடந்த சில தினங் களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண் டார். நாங்குநேரி போலீஸார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், “கண்ணனு க்கும், சிங்கிகுளம் பகுதியைச் சேர்ந்த மகாலெட்சுமி (35) என்பவருக்கும் இடையே நட்பு இருந்துள்ளது. இதற்கு முத்து இடையூறாக இருந்துள்ளார். இதனால் மகாலெட்சுமி தூண்டு தலின்பேரில் கண்ணன் தனது மனைவி முத்துவை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் முத்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது” என, போலீஸார் தெரிவித்தனர். கண்ணன், மகாலெட்சுமி ஆகி யோரை போலீஸார் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago