சமீபத்தில் பெய்த தொடர் மழையால் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ஊருணி நிரம்பியது. இந்த ஊருணியின் கரைகள் பலமிழந்து காணப்படுகிறது. இந்நிலையில், ஊருணிக்கரையையொட்டி வடக்கு பகுதியில் சாலையில் நெல் மூட்டை லோடு ஏற்றிக்கொண்டு நேற்று ஒரு லாரி சென்றுகொண்டு இருந்தது. ஊருணிக்கரையோரமாக சென்றபோது, தடுப்புச் சுவர் சரிந்தது. இதனால் நெல் மூட்டைகளுடன் ஊருணியில் லாரி கவிழ்ந்தது. லாரியை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் சிறு காயங்களுடன் தப்பினார்.
ஊருணிக் கரையையொட்டி மின்மாற்றி சாய்ந்த நிலையில் உள்ளது. இந்த மின் மாற்றியும் ஊருணியில் சரிந்து விழும் அபாயம் இருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மின் வாரியத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, தற்காலிக ஏற்பாடாக கயிறு கட்டி மின்வாரியத்தினர் பாதுகாப்பு ஏற்பாடு செய்தனர். ஆபத்து ஏற்படுவதற்குள் முன்னெச்சரிக்கையாக அந்த மின் மாற்றியை அங்கிருந்து இடமாற்றம் செய்ய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊருணியில் பொதுமக்கள் குளிக்க ஊராட்சி நிர்வாகம் தடை செய்து, குளிக்கச் செல்லும் பாதையை அடைத்து வைத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago