செங்கோட்டையைச் சேர்ந்த மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைதானவருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
நெல்லை மாவட்டம், கற் குடியைச் சேர்ந்தவர் பதிபூரணம்.
செங்கோட்டை வனப்பகுதியில் 1994-ல் விறகு எடுக்கச் சென்ற மூதாட்டியை பதிபூரணம் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் பரிபூரணத்து க்கு ஆயுள் தண்டனை வழங்கி 1996-ல் தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை ரத்து செய்யக்கோரி இலவச சட்டப்பணிகள் ஆணைக் குழு மூலம் பதிபூரணம் 2018-ல் மனு தாக்கல் செய்தார். அதில் 21 ஆண்டுகளாக சிறையில் இருப்பதால் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என பதிபூரணம் கோரி இருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஜி.ஜெயச் சந்திரன் ஆகியோர் விசாரித்தனர்.
மனுதாரர் வனப்பகுதிக்கு விறகு எடுக்க சென்ற மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். இதை நேரில் பார்த்தவர்கள் உறுதி செய்துள்ளனர். மூதாட்டி யின் உடலில் காயங்கள் இருந்துள்ளன. அதனால் தான் மேல் சிகிச்சை க்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி யுள்ளனர்.
அங்கு சிகிச்சை பலன ளிக்காமல் அவர் இறந்துள் ளார். சாட்சிகள், ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப் படையில் விசாரணை நீதிமன்றம் மனுதாரருக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. அதில் தலையிட முடியாது. மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago