தி.மலை அண்ணாமலையார் கோயிலில் - 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் :

By செய்திப்பிரிவு

கரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந் நிலையில் வார விடுமுறை நாளான நேற்று (ஞாயிற்றுகிழமை) பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தன. கோயில் நடை அதி காலையில் திறக்கப்பட்டு, மூலவர் மற்றும் அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன.

இதையடுத்து சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். காலை 5 மணியில் இருந்து பக்தர்கள் வரத் தொடங்கினர். பின்னர், பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. பொது தரிசன பாதை மற்றும் கட்டண தரிசன பாதையில் சுமார் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

கார்த்திகை, மார்கழி மற்றும் தை மாதத்தில், சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக இருக்கும். அதேபோல், இந்தாண்டும் வழக் கம்போல் பக்தர்களின் கூட்டம் அதிகளவில் இருந்துள்ளது.

தமிழக பக்தர்கள் மட்டுமின்றி, ஆந்திர மாநில பக்தர்கள் எண் ணிக்கையும் கணிசமாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்