வேலூர் மண்டல தொழில் நுட்ப கல்வி கோட்ட செயற் பொறி யாளராக பணியாற்றி வந்தவர் ஷோபனா(57). இந்நிலையில் வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் அவரது கார், அலுவலகம், தங்கியிருந்த வீடு ஆகிய இடங்களில் கடந்த நவ. 2-ம் தேதி சோதனை நடத்தினர்.
இதில், கணக்கில் வராத ரூ.16 லட்சம் பணம் உள்ளிட்ட ஆவணங்களை காவல் துறை யினர் கைப்பற்றினர். ஓசூரில் உள்ள ஷோபனா வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில், ரூ.2 கோடிக்கு மேல் பணம், 38 பவுன் நகைகள், டெபாசிட் பத்திரங்கள், வங்கி கணக்கு புத்தகம், லாக்கர் சாவி, வெள்ளிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதைத்தொடர்ந்து, அவர் மீது வேலூர் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இந்நிலையில், லஞ்ச வழக்கில் கைதாகி சிறைக்கு சென்ற ஷோபனா சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago