சேத்தியாத்தோப்பு பகுதியில் - மணிலா விதைப்பு பணி தீவிரம் :

சேத்தியாத்தோப்பு பகுதியில் விவசாயிகள் மணிலா விதைப்பு பணி தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வீரமுடையாநத்தம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல கிராமங்கள் வெள்ளாற்றின் கரையோரப் பகுதிகளாக இருப்பதால் வாழை, கத்திரி, வெண்டை, கருணைக்கிழங்கு, இஞ்சி, மஞ்சள், வெங்காயம் பயிர் செய்யப்பட்டாலும், இப்பகுதியில் சுமார் 500 ஏக்கருக்கு மேல் மணிலா விவசாயம் நடைபெற்று வருகிறது. தற்போது வீரமுடையாநத்தம் பகுதியில் உள்ள விவசாயிகள் மணிலா விதைப்பு செய்து வருகின்றனர். 110 நாட்கள் பயிரான மணிலாவில் பருவநிலை மற்றும் மழை ஓரளவுக்கு ஒத்துழைப்பு தந்தால் இது நல்ல லாபம் தரும் . இல்லை என்றால் நஷ்டம் தான் வரும் என்று மணிலா விவசாயிகள் தெரிவித்தனர். வேளாண் துறை அதிகாரிகள் மணிலா சாகுபடி தொழில் நுட்பம் மற்றும் சந்தைப்படுத்துதல் பயிற்சி வழங்கிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இப்பகுதி மணிலா விவசாயிகள் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்